< Back
மாநில செய்திகள்
கலப்பை பிடித்து ஏர் உழுத கலெக்டர்
வேலூர்
மாநில செய்திகள்

கலப்பை பிடித்து ஏர் உழுத கலெக்டர்

தினத்தந்தி
|
25 Jun 2023 11:08 PM IST

ஜார்த்தான்கொல்லையில் கலப்பை பிடித்து கலெக்டர் ஏர் உழுதார்.

அடுக்கம்பாறை

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு ஒன்றியத்துக்கு உட்பட்ட பீஞ்சமந்தை, ஜார்த்தான்கொல்லை, பாலாம்பட்டு ஆகிய மலை ஊராட்சிகளில் சாலை அமைப்பு தொடர்பாக கலெக்டர் குமாரவேல் பாண்டியன் ஆய்வு மேற்கொண்டார்.

ஜார்த்தான்கொல்லை கிராமத்தை அவர் பார்வையிட்டபோது விவசாயி ஒருவர் மாடுகளை பூட்டி ஏர் உழுது கொண்டிருந்தார். இதனைப்பார்த்த கலெக்டர் அங்கு சென்று விவசாயியிடம் கலந்துரையாடினார்.

இதனைத்தொடர்ந்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கலப்பை பிடித்து ஏர் உழுது மகிழ்ந்தார்.

மேலும் செய்திகள்