< Back
மாநில செய்திகள்
ராமநாதபுரத்தின் அவலநிலை: காலி குடங்களுடன் குடிதண்ணீரை தேடி அலையும் மக்கள்...!
மாநில செய்திகள்

ராமநாதபுரத்தின் அவலநிலை: காலி குடங்களுடன் குடிதண்ணீரை தேடி அலையும் மக்கள்...!

தினத்தந்தி
|
9 Sept 2022 4:47 PM IST

ராமநாதபுரத்தில் மோட்டார் சைக்கிளில் காலி குடங்களுடன் குடிதண்ணீரை தேடி மக்கள் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம்,

தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் வறண்ட மாவட்டம் என்று தற்போது வரை ராமநாதபுரம் மாவட்டம் அழைக்கப் பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் ராமநாதபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை மற்ற மாவட்டங்களைவிட மழை பெய்வது குறைவாக இருப்பதோடு மட்டுமில்லாமல் குடிதண்ணீர் பிரச்சினை என்பது மிக முக்கிய பிரதான பிரச்சினையாக உள்ளது.

ஒருபுறம் வைகை அணையிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் கடலில் கலந்து வீணாகி வருகின்றது. மறுபுறம் மக்கள் குடிதண்ணீருக்காக குடங்களுடன் அலையும் நிலையும் இருந்து வருகின்றது.

இந்த நிலையில் திருஉத்தரகோசமங்கை அருகே ஆனைகுடி சாலையில் குடிதண்ணீருக்காக மோட்டார் சைக்கிளில் தள்ளு வண்டியை இணைத்து குடங்களுடன் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு தண்ணீரை தேடி மக்கள் அலையும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்