< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து உறுதிமொழி ஏற்பு
|3 Oct 2022 12:15 AM IST
நீர்முளை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது.
வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் நீர்முளை ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி மதியழகன் தலைமை தாங்கினார். உதவி வேளாண்மை அலுவலர் நவீன் குமார், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கிராம சபை கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது குறித்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம், பள்ளி ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத்தலைவர், உறுப்பினர்கள், மகளிர் குழு உறுப்பினர்கள், மக்கள் நல பணியாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலாளர் புவனேஸ்வரி நன்றி கூறினார்.