< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
|11 Jun 2022 1:35 AM IST
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கி, குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழி வாசிக்க அவரை பின்தொடர்ந்து அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர்.
மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி., அந்தியூர் தொகுதி ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட வருவாய் அதிகாரி சந்தோஷினி சந்திரா, துணை மேயர் செல்வராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாலாஜி, தொழிலாளர் நலத்துறை இணை ஆணையாளர் சசிகலா, உதவி ஆணையாளர்கள் முருகேசன், திருஞானசம்பந்தம் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.