< Back
மாநில செய்திகள்
இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றக்கோரி பா.ம.க.வினர் கல்லூரி முதல்வரிடம் மனு
அரியலூர்
மாநில செய்திகள்

இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றக்கோரி பா.ம.க.வினர் கல்லூரி முதல்வரிடம் மனு

தினத்தந்தி
|
22 Jun 2023 12:44 AM IST

இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றக்கோரி பா.ம.க.வினர் கல்லூரி முதல்வரிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாட்டில் அரசு கலைக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சேர்க்கையில் இட ஒதுக்கீட்டு முறையில் எவ்வித சமரசமும் இல்லாமல் பின்பற்ற வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி பா.ம.க. மாநில மாணவரணி செயலாளர் கொடுக்கூர் ஆளவந்தார், நகர செயலாளர் பரசுராமன் ஆகியோர் ஜெயங்கொண்டம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் ராணியிடம் மனு அளித்தனர். அப்போது தெற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர்கள் வினோத், ராஜ்குமார், அருண் மற்றும் கல்லூரி மாணவர்கள் உடனிருந்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்