< Back
மாநில செய்திகள்
சதுரங்கம் விளையாடுவதால் சிந்தனை திறன் அதிகரிக்கும்
விருதுநகர்
மாநில செய்திகள்

சதுரங்கம் விளையாடுவதால் சிந்தனை திறன் அதிகரிக்கும்

தினத்தந்தி
|
26 Jun 2022 12:43 AM IST

சதுரங்கம் விளையாடுவதால் சிந்தனை திறன் அதிகரிக்கும் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

சிவகாசி,

சதுரங்கம் விளையாடுவதால் சிந்தனை திறன் அதிகரிக்கும் என கலெக்டர் மேகநாதரெட்டி கூறினார்.

சதுரங்கப்ேபாட்டி

சிவகாசி ஸ்ரீகாளீஸ்வரி கல்லூரியில் வாழ்நாள் ஞாபகார்த்த மாவட்ட அளவிலான சதுரங்கப்போட்டி நடைபெற்றது. இதை கலெக்டர் மேகநாதரெட்டி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து மாணவர்களுடன் சதுரங்கம் விளையாடினார். மாவட்டம் முழுவதும் இருந்து 230 மாணவர்கள், 92 மாணவிகள் என மொத்தம் 322 பேர் கலந்து கொண்டனர்.

அப்போது அவர் மாணவர்கள் மத்தியில் பேசியதாவது:- 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் ஜூலை 28-ந்தேதி தொடங்கி, ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி வரை நடக்கிறது.

சாதிக்க முடியும்

காளீஸ்வரி கல்லூரியில் தற்போது நடைபெறும் இந்த போட்டிகளில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடிக்கும் மாணவ, மாணவிகளுக்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியை நேரில் பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி தர அரசு முடிவு செய்துள்ளது.

சதுரங்கம் விளையாடுவதால் சிந்தனை திறன் அதிகரிக்கும். மாணவர்கள் கணித பாடத்தில் சாதிக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், சிவகாசி சப்- கலெக்டர் பிரிதிவிராஜ், காளீஸ்வரி கல்லூரியின் செயலர் ஏ.பி. செல்வராஜன், விருதுநகர் மாவட்ட செஸ் அசோசியேஷன் துணைத்தலைவர் ராஜன், சிவகாசி தாசில்தார் லோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்