< Back
மாநில செய்திகள்
விழுப்புரம்
மாநில செய்திகள்
விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி
|11 Nov 2022 12:15 AM IST
சிறுவாக்கூர் தொடக்கப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம், கழிப்பறை வசதி காணை ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
விழுப்புரம்
காணை ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் கல்பட்டு மாதா கோவில் வளாகத்தில் இயங்கி வரும் சிறுவாக்கூர் ஆர்.சி.தொடக்கப்பள்ளிக்கு விளையாட்டு மைதானம் மற்றும் கழிப்பறை கட்டுவது, கல்பட்டு கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கு கல்லறை தோட்டம் அமைக்க அனுமதிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் ஒன்றியக்குழு துணை தலைவர் வீரராகவன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் முருகன், சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நரசிம்மன், எழிலரசன், பொறியாளர்கள் முருகன், செந்தில் வடிவு, மேலாளர் அசோக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்த பிறகு அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வி அடையாள அட்டை வழங்கினார்.