< Back
மாநில செய்திகள்
மாநில கபடி போட்டிக்கு இன்று வீரர்கள் தேர்வு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாநில கபடி போட்டிக்கு இன்று வீரர்கள் தேர்வு

தினத்தந்தி
|
10 Aug 2022 12:56 AM IST

மாநில கபடி போட்டிக்கு வீரர்கள் தேர்வு இன்று (புதன்கிழமை) நடக்கிறது

தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் சிறுவர்களுக்கான (ஜூனியர்) தமிழ்நாடு சாம்பியன் ஷிப் கபடி போட்டிகள் இம்மாதம் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மயிலாடுதுறையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான வீரர்கள் தேர்வு செய்யும் போட்டி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இன்று (புதன்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இந்த போட்டிகளில் பங்கேற்க விரும்பும் சிறுவர்கள் 20 வயதுக்குள் இருக்க வேண்டும். எடையளவு 70 கிலோ மிகாமல் இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க விரும்புவோர் தங்களது வயது சான்றிதழுக்காக ஆதார்அட்டை, பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் அசல் மற்றும் நகலுடன் மார்பளவு போட்டோவையும் எடுத்து வந்து பெயர் பதிவு செய்து கொண்டு போட்டியில் கலந்து கொள்ளலாம் என அமெச்சூர் கபடி கழகத்தின் தலைவர் ஓவியர் முகுந்தன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ராஜ்குமார் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்