< Back
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி
கரூர்
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி

தினத்தந்தி
|
3 Sept 2023 12:03 AM IST

பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி நடந்தது.

நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் எனும் தூய்மை பணியில் கரூர் மாநகராட்சி மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு மாபெரும் தூய்மை பணியை நடத்தி வருகிறது. அதன்ஒருபகுதியாக நேற்று கரூர் பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதில் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில், தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வலர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் என பலர் பெரியகுளத்துப்பாளையம் பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். இதேபோல் காந்திகிராமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள பகுதியில் இருந்த பிளாஸ்டிக் குப்பைகளை கல்லூரி மாணவிகள் அகற்றினர்.

மேலும் செய்திகள்