கரூர்
பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி
|பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றும் பணி தொடங்கியது.
கரூர் வெங்கமேடு பகுதியில் தேங்கியுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்றது. இதற்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமை தாங்கினார். இதில் தன்னார்வ அமைப்புகள், மாநகராட்சி அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள், பொதுமக்கள் என 200-க்கும் மேற்பட்டோர் ஒன்றிைணந்து பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர். பின்னர் மாநகராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட திட்ட சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், கவுன்சிலர் ஸ்டீபன்பாபு ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். எனது குப்பை எனது பொறுப்பு திட்டம் தொடங்கியதில் இருந்து புலியூர் சிமெண்டு ஆலைக்கு பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 4 மாதங்களில் மட்டும் கரூர் மாநகராட்சியில் இருந்து 178 டன் பிளாஸ்டிக் கழிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. வரும் காலங்களில் 300 முதல் 350 டன் வரை பிளாஸ்டிக் கழிவுகளை சிமெண்டு ஆலைக்கு அனுப்பப்படும் என்று மேயர் தெரிவித்தார்.