< Back
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை விழிப்புணர்வு முகாம்
தேனி
மாநில செய்திகள்

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி
|
7 April 2023 7:00 PM GMT

தேனியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை விழிப்புணர் முகாம் நாளை நடக்கிறது.

தேனி நட்டாத்தி நாடார் ஆஸ்பத்திரியில், விபத்துகளில் உடல் உறுப்புகள் சேதம், சர்க்கரை நோய் காரணமாக ஏற்பட்ட காயங்கள், முகத்தழும்புகள், உதட்டுப்பிளவு, தீக்காயம் போன்ற பாதிப்புகளுக்கு உடல் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை (பிளாஸ்டிக் சர்ஜரி) மூலம் சரிசெய்தல் ஆகியவை குறித்த விழிப்புணர்வு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் பகல் 2 மணி வரை நடக்கிறது. முகாமில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஜய் கணேஷ் கலந்து கொண்டு பரிசோதனைகள் செய்து ஆலோசனை வழங்குகிறார். இந்த முகாமில் அதிக கொழுப்பு காரணமாக உடல் பருமன் உள்ளவர்கள், அதிகப்படியான மார்பு வளர்ச்சி அல்லது குறைவான வளர்ச்சி உள்ளவர்கள், தோல் சுருக்கம், கருகிய தோல் நீண்ட அல்லது சிறிய காதுகள் மற்றும் சிறிய மூக்கு உள்ளவர்கள், பிறப்பிலேயே உதடு பிளவு உள்ள குழந்தைகள் ஆகியோருக்கு இலவச பரிசோதனைகள் செய்யப்படும். இதற்கான ஏற்பாடுகளை மருத்துவமனை மேலாளர் சாந்தி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் சலீம், ஷேக் பரீத் மற்றும் தீபன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்