< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் பைகள்- புகையிலை பொருட்கள் பறிமுதல்
|22 Dec 2022 12:30 AM IST
பிளாஸ்டிக் பைகள்- புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவின்படி வேளாங்கண்ணி கடைத்தெரு பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் வினியோகம் செய்யும் கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி தலைமையில் பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கடைகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதில் 20 கிலோ பிளாஸ்டிக் பைகள் மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.3 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.