< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
|13 Oct 2022 1:45 AM IST
பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வல்லம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகள், வணிக நிறுவனங்களில் செயல் அலுவலர் பிரகந்தநாயகி தலைமையில், துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடைகாரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பேரூராட்சி பணியாளர்கள் மூலம் கடைகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரம் வினியோகிக்கப்பட்டது.