< Back
மாநில செய்திகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
|12 July 2022 11:47 PM IST
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள தொண்டமாந்துறை ஊராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் ஊரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பின்னர் ஊராட்சி மன்ற அலுவலகம் வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஒருமுறை பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது, அதனால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. இந்த ஊர்வலத்தில் பள்ளி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி எழுத்தர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.