< Back
மாநில செய்திகள்
சிவகங்கை
மாநில செய்திகள்
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
|6 July 2022 12:29 AM IST
எஸ்.புதூர் அருகே பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்பட்டது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் அருகே கே.நெடுவயல் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு ஊராட்சி தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் தமிழக முதல்-அமைச்சரின் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்கும் வகையில் இந்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து துணிப்பையை கையில் எடுப்போம் என்ற பதாகையை ஏந்தி மாணவ, மாணவிகள் முக்கிய வீதிகளில் வலம் வந்தனர். இதில் ஊராட்சி துணை தலைவர் கரும்பாயிரம், ஊராட்சி செயலர் பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.