< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
நாய்குட்டியின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் பாட்டில்
|2 Oct 2023 12:15 AM IST
மன்னார்குடியில் நாய்குட்டியின் தலையில் சிக்கிய பிளாஸ்டிக் பாட்டிலை தீயணைப்பு துறையினர் அகற்றினர்.
மன்னார்குடி:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பூக்கொல்லை பகுதியில் சுற்றித்திரிந்த தெரு நாய்க்குட்டி ஒன்று உணவு தேடி அலைந்த போது சாலை ஓரம் கிடந்த பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்த உணவை சாப்பிட முயன்றது. அப்போது நாய் குட்டியின் தலையில் பிளாஸ்டிக் பாட்டில் மாட்டிக்கொண்டது. பிளாஸ்டிக் பாட்டிலில் இருந்து தலையை வெளியே எடுக்க முடியாமல் நாய்க்குட்டி அங்கும் இங்கும் சுற்றித்திரிந்தது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் நேற்று மன்னார்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர் தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் நாய்க்குட்டியை பிடித்து அதன் தலையில் மாட்டி இருந்த பிளாஸ்டிக் பாட்டிலை லாவகமாக வெளியே எடுத்து நாய்க்குட்டியை மீட்டனர். தீயணைப்பு படையினரின் இந்த மனிதநேய செயலை அப்பகுதி மக்கள் தீயணைப்பு வீரர்களை பாராட்டினர்.