< Back
மாநில செய்திகள்
தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பனை விதைகள் நடும் பணி
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பனை விதைகள் நடும் பணி

தினத்தந்தி
|
20 Oct 2023 7:47 PM IST

தேவரியம்பாக்கம் ஊராட்சியில் பனை விதைகள் நடும் பணியை உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. சுந்தர் தொடங்கி வைத்தார்.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தோண்டான் குளம் கிராமத்தில் சுற்றுச்சூழலை பாதுகாத்திடும் வகையில் அரசுக்கு சொந்தமான இடங்களில் 35 ஆயிரம் பனை விதைகள் நடும் பணிகள் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் நடைபெற்று வருகிறது. ஊராட்சி மன்ற தலைவர் அஜய் குமார் தலைமையில் நடைபெற்ற பனை விதைகள் நடும் பணி தொடக்க விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர் கலந்துகொண்டு பனை விதைகளை கிராம மக்களுக்கு வழங்கி பனைவிதை நடும் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே தேவேந்திரன், ஒன்றிய குழு துணை தலைவர் பி.சேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் ந.காஞ்சனா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கோவிந்தராஜன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்