< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
பனை விதைகள் நடும் பணி
|20 Sept 2023 12:15 AM IST
முத்துப்பேட்டை அருகே பனை விதைகள் நடும் பணி
தில்லைவிளாகம்:
முத்துப்பேட்டையை அடுத்த ஆலங்காடு கிராமத்தில் தமிழ்நாடு விவசாய குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்கம் மற்றும் முத்துப்பேட்டை தோட்டக்கலை துறை இணைந்து பனைவிதைகள் நடும் பணி நடந்தது. நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு விவசாய சங்க குத்தகைதாரர்கள் பாதுகாப்பு நல சங்க மாவட்ட தலைவர் துரைஅரசன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் மோகன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பிரவீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் புலவேந்திரன், கலியமூர்த்தி ஆகியோர் பனை விதைகள் நடும் பணியை தொடங்கி வைத்தனர்.