< Back
மாநில செய்திகள்
பனை விதை, மரக்கன்றுகள் நடும் பணி
சிவகங்கை
மாநில செய்திகள்

பனை விதை, மரக்கன்றுகள் நடும் பணி

தினத்தந்தி
|
2 Oct 2023 12:15 AM IST

கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு ஆலங்குடி-மேலமாகாணம் கண்மாய் கரையில் பனைவிதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா நாள் விழாவை முன்னிட்டு, சிவகங்கையை அடுத்த ஆலங்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில், பனை விதைகள் மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தலைமையில் நடைபெற்றது. மரகன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்து கலெக்டர் பேசியதாவது,

உலக சுற்றுலா தினத்தை தமிழ்நாடு அரசு, சுற்றுலாத்துறையின் சார்பில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு உலக சுற்றுலா விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுற்றுலாத் தலங்களில் தூய்மை பணி முகாம் மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடத்திட திட்டமிடப்பட்டு, "சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்"என்ற கருப்பொருளினை மையமாக கொண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு பரிசு

மேலும், கலைஞர் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், ஆலங்குடி-மேலமாகாணம் கண்மாய் கரையில் 100 பனைவிதைகள் மற்றும் பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இவ்வாறு அவர் கூறினார்.

உலக சுற்றுலா நாளினை முன்னிட்டு பள்ளி மாணவா்களிடையே "சுற்றுலா மற்றும் பசுமை முதலீடுகள்"தொடர்பாக நடைபெற்ற ஓவியப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விழாவில், மாவட்ட சுற்றுலா அலுவலர் சங்கர், மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார், ஆலங்குடி ஊராட்சிமன்ற தலைவர் மலைச்சாமி, ஆலங்குடி பள்ளி தலைமை ஆசிரியை சித்ரா மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்