< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்
10 ஆயிரம் பனைவிதைகள் நடும் பணி
|12 Sept 2023 11:33 PM IST
வாணியம்பாடி அருகே 10 ஆயிரம் பனைவிதைகள் நடும் பணியை கலெக்டர் பாஸ்கரபாண்டியன் தொடங்கி வைத்தார்.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட நாட்டறம்பள்ளி ஒன்றியம், அம்பலூர் ஊராட்சியில் 10 ஆயிரம் பனை விதைகள் நடும் பணி நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கலந்து கொண்டு பனை விதைகளை பாலாற்று படுகையில் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் கு.செல்வராசு, உதவி இயக்குனர் எஸ்.விஜயகுமாரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அப்துல் கலீல், சதானந்தம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனிகிரேஷ், உதவி பொறியாளர் கார்த்திகேயன், பணி மேற்பார்வையாளர்கள் கலைவாணன், அழகரசு, துணைத்தலைவர் நர்மதா நந்தகோபால் மற்றும் வார்டு உறுப்பினர்கள். பொதுமக்கள் கலந்து கொண்டனர்.