< Back
மாநில செய்திகள்
வீடுகளில் கருப்பு கொடி கட்டி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்
நீலகிரி
மாநில செய்திகள்

வீடுகளில் கருப்பு கொடி கட்டி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
26 Oct 2023 1:15 AM IST

சேரம்பாடியில் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

சேரம்பாடியில் வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தோட்ட தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

கருப்பு கொடி

பந்தலூர் அருகே சேரம்பாடி அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-1, 2, 3, 4) பகுதிகளில் ஏராளமான தொழிலாளர்கள் தமிழக அரசு கட்டி கொடுத்த குடியிருப்புகளில் குடும்பத்தினருடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களிடம் கருத்து கேட்காமல் உருவாக்கப்பட்ட அரசாணை 173-ஐ ரத்து செய்ய வேண்டும், வனத்துறையினரிடம் ஒப்படைத்த நிலங்களை திரும்ப பெற வேண்டும், வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வீடுகளில் கருப்பு கொடி கட்டி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தொடர் போராட்டம்

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறியதாவது:-

நாங்கள் குடியிருக்கும் குடியிருப்புகளை நிரந்தரமாக எங்களுக்கே வழங்க வேண்டும். தற்காலிக தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு 3 சென்ட் நிலம் வழங்கி புதிய குடியிருப்புகள் கட்டி கொடுக்க வேண்டும். உள்ளாட்சித்துறை மூலம் சாலை, நடைபாதை, குடிநீர், தெருவிளக்குகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும். அரசு அறிவித்த கூடுதல் சம்பளத்தை வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்