< Back
மாநில செய்திகள்
தோட்டத் தொழிலாளர்கள் குறைதீர்ப்பு முகாம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தோட்டத் தொழிலாளர்கள் குறைதீர்ப்பு முகாம்

தினத்தந்தி
|
13 Oct 2023 12:30 AM IST

வால்பாறையில் தோட்டத் தொழிலாளர்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது.

வால்பாறை பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் பணிபுரியக்கூடிய இடங்களுக்கே, இதய தெய்வம் எம்.ஜி.ஆர் தோட்ட தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது நேரில் சென்று தொழிலாளர்களின் குறை தீர்க்கும் முகாம் நடத்தி வருகிறார். அதன்படி வால்பாறை அருகில் உள்ள அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் இந்த ஆண்டிற்கான தீபாவளி போனஸ் கூடுதலாக பெற்றுத் தருவதற்கும், பண்டிகை முன் பணமாக ரூ.6 ஆயிரம் பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவித்த சம்பளத்திற்கான அரசாணையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என தெரிவித்தனர். அப்போது பேசிய தொழிற்சங்க தலைவர் வால்பாறை அமீது, தொழிலாளர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றித்தருவதற்கு தோட்ட நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், தோட்ட அதிபர்கள் சங்கத்தின் செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும், பண்டிகை கால முன் பணம் பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து கோரிக்கைகளையும் குறித்து 10 தினங்களுக்குள் தோட்ட நிர்வாகங்கள், தோட்ட அதிபர்கள் சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றார்.

மேலும் செய்திகள்