திருவாரூர்
ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி
|திருத்துறைப்பூண்டியில் ஒரு லட்சம் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. இதில் எம்.எல்.ஏ., துணை போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலுகாவில் டெல்டா பனை பாதுகாப்பு இயக்கம் சார்பில் ஒரு லட்சம் பனை விதை நடும்பணி தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு நகர்மன்ற நியமன குழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன், திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், நகர்மன்ற துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாரிமுத்து எம்.எல்.ஏ கலந்துகொண்டு பனைவிதை நடும்பணியை தொடங்கிவைத்தார். இந்த திட்டம் குறித்து ஒருங்கிணைப்பாளர் யோகநாதன் கூறுகையில் திருத்துறைப்பூண்டி தாலுகா முழுவதும் நவம்பர் மாதம் வரை இப்பணி நடைப்பெறும். அடுத்த ஆண்டு தமிழ்நாடு முழுவதும் பத்து கோடி விதை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார். பனையின் பயன் குறித்து இயற்கை வேளாண் பயிற்றுனர் செந்தில்குமார் பேசினார். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் பிரதான் பாபு, நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ரவி, தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நடனம், நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளர் ராஜீவ், தோட்டகலை, நீர் வள ஆதார துறை அலுவலர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் கோமதி செந்தில்குமார், வசந்த், நகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியை வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆசைதம்பி சரவணம் ஒருங்கிணைத்தார்.