< Back
மாநில செய்திகள்
100 செண்பக மரக்கன்றுகள் நடும் பணி
திருவாரூர்
மாநில செய்திகள்

100 செண்பக மரக்கன்றுகள் நடும் பணி

தினத்தந்தி
|
9 Oct 2023 12:28 AM IST

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் வளாகத்தில் 100 செண்பக மரக்கன்றுகள் நடும் பணியை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தொடங்கி வைத்தார்.

மன்னார்குடி:

மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் வளாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 100 செண்பக மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. இதில் தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு பணியை தொடங்கி வைத்தார்.மேலும் கோவிலில் 1000 நபர்களுக்கு அன்னதானத்தையும் தொடங்கி வைத்தார்.தொடர்ந்து 100 நாதஸ்வர இசை கலைஞர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.நிகழ்ச்சியில் கலெக்டர் சாருஸ்ரீ, மாவட்ட ஊராட்சித் தலைவர் தலையாமங்கலம் பாலு, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ப.ராணி, மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனா மணி, ராஜகோபாலசாமி கோவில் அறங்காவலர் குழு தலைவர் இளவரசன், மன்னார்குடி நகர சபை தலைவர் மன்னை.சோழராஜன், கோவில் செயல் அலுவலர் மாதவன், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்