< Back
மாநில செய்திகள்
1 லட்சம் பனை விதைகள் நடும் பணி
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

1 லட்சம் பனை விதைகள் நடும் பணி

தினத்தந்தி
|
30 Sept 2022 12:15 AM IST

பிரதாபராமபுரத்தில் 1 லட்சம் பனை விதைகள் நடும் பணியை வட்டார வளர்ச்சி அலுவலர் தொடங்கி வைத்தார்.

வேளாங்கண்ணி:

வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சியில் 6 கி.மீ தூரம் கடற்கரை கொண்ட கிராமமாகும். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி மற்றும் 2018-ம் ஆண்டு வீசிய கஜாபுயலால் கடலோர கிராமம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது.அதனை தடுக்கும் வகையில் இயற்கை அரணாக விளங்கும் பனை மரத்தை அதிக அளவில் நட வேண்டும் என ஊராட்சி சார்பில் திட்டமிட்டு 5 ஆண்டுகளுக்குள் 5 லட்சம் பனை விதைகளை நட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளில் 2 லட்சம் பனை விதைகள் நடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 1 லட்சம் பனை விதைகள் நடும் பணி நடந்தது. இந்த பணியை கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன் தொடங்கி வைத்தார். பிரதாபராமபுரம் ஊராட்சி செருதூர் கடற்கரையில் இருந்து- ராமர்மடம் வரை 6 கிலோமீட்டர் தொலைவிற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் மூலம் பனை விதை நடப்பட்டது.

மேலும் செய்திகள்