< Back
மாநில செய்திகள்

தர்மபுரி
மாநில செய்திகள்
பாலக்கோடு அருகே சாலையோரம் மரக்கன்றுகள் நடும் பணி

14 Jun 2023 12:30 AM IST
பாலக்கோடு:
பாலக்கோடு நெடுஞ்சாலை துறை சார்பில் பசுமை நிறைந்த சாலை, பாதுகாப்பான வழிப்பயணம் என்ற குறிக்கோளுடன் மரக்கன்றுகள் நடும் பணி எர்ரனஅள்ளி சாலையில் தொடங்கப்பட்டது. இதில் பாலக்கோடு அருகே எர்ரணஅள்ளி முதல் நாகதாசம்பட்டி சாலை வரையிலும், வெள்ளி சந்தை முதல் மாரண்டஅள்ளி சாலை வரையிலும் மற்றும் பாலக்கோடு புறவழி சாலையோரம் சுமார் 2,400 மரக்கன்றுகள் நடும் பணியினை உதவி கோட்டப் பொறியாளர் கவிதா தொடங்கி வைத்தார்.