< Back
மாநில செய்திகள்
மாடவீதியை விரிவாக்கம் செய்ய ஏற்பாடு: திருத்தணி முருகன் கோவில் 5 கடைகள் கோவில் வசம் ஒப்படைப்பு - மேற்கூரைகள் அகற்றும் பணி மும்முரம்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மாடவீதியை விரிவாக்கம் செய்ய ஏற்பாடு: திருத்தணி முருகன் கோவில் 5 கடைகள் கோவில் வசம் ஒப்படைப்பு - மேற்கூரைகள் அகற்றும் பணி மும்முரம்

தினத்தந்தி
|
30 July 2022 2:13 PM IST

திருத்தணி முருகன் கோவில் மாடவீதியை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளதால் அங்குள்ள 5 கடைகள் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் மலைமேல் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கடைகள் கட்டப்பட்டு பொது ஏலத்தின் மூலம் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது. அந்த வகையில், மலைக்கோவில் மேல் உள்ள மாடவீதியில் கோவில் நிர்வாகம் சார்பில் மலர் அங்காடி, விற்பனை நிலையம், தேங்காய் கடை, குளிர்பான கடை உள்ளிட்ட 5 கடைகள் ஆண்டுதோறும் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் வரும் வருவாய் கோவில் கணக்கில் சேமிப்பு வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து அறநிலையத்துறை முருகன் கோவில் மாடவீதியை விரிவாக்கம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதன்காரணமாக கடந்த மாதம் நடைப்பெற்ற ஏலத்தில் மலைக்கோவில் மாடவீதியில் உள்ள 5 கடைகள் குறித்து அறிவிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 26-ந் தேதி மாடவீதியில் உள்ள 5 கடைகள் நடத்தும் நபர்களிடமிருந்த கடை சாவிகள் கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் மாடவீதியிலிருக்கும் கடைகளின் மேற்கூரைகள் கோவில் நிர்வாகம் மூலம் அகற்றும் பணிகள் முழுவீச்சில் நடைப்பெற்று வருகிறது.

இதுகுறித்து கோவில் அதிகாரியிடம் கேட்டபோது, திருத்தணி முருகன் கோவிலில் விஷேச நாட்களில் முருகப்பெருமான் தேரில் எழுந்தருளி உலா வரும் மாடவீதியின் அகலம் குறுகிய அளவில் உள்ளதால் தேரில் வீதியுலா வருவதில் சிரமம் உள்ளது. எனவே மாடவீதியை விரிவாக்கம் செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்