< Back
மாநில செய்திகள்
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான திட்டங்கள்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
21 July 2024 5:25 AM GMT

தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவு செய்யும் என்று நம்புவதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

மத்திய பட்ஜெட் நாளை மறுநாள் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், தமிழக மக்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு நிறைவேற்றுமென நம்புவதாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில்

* மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்திற்கான நிதி

* தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்

* பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு

* கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல்

* தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு

* கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல்

உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்