< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
பிளாஞ்சேரி சிம்ஹாருடவராகி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்
|26 Jun 2023 1:22 AM IST
பிளாஞ்சேரி சிம்ஹாருடவராகி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம்
கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு தனி கோவில் கொண்டு சிம்ஹாருட வராகி அம்மன் அருள் பாலிக்கிறார். ஆஷாடநவராத்திரியையொட்டி நேற்று சிம்ஹாருட வராகி அம்மனுக்கு சரஸ்வதி அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. சிறப்பு பூஜைகளை கோவில் அர்ச்சகர் கண்ணன் சிவாச்சாரியார் செய்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் எஸ். நாகராஜ சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.