< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகம்-கர்நாடகம் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டம்..!
|1 Aug 2023 1:57 PM IST
தமிழகம்-கர்நாடகம் இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. தற்போது இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரெயில் இயக்கப்படுகின்றன. மேலும் மூன்றாவது வழித்தடத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் இயக்க சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவிக்கும்போது, இந்தியாவில் முதல் முறையாக தமிழகம்-கர்நாடகா மாநிலங்களுக்கு இடையே மெட்ரோ ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் ஓசூர்-கர்நாடகாவின் பொம்மசந்திரா இடையே இச்சேவை தொடங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான திட்ட செலவை இரு மாநிலங்களும் பகிர்ந்து கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.