கள்ளக்குறிச்சி
23 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம்
|கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு 23 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம் கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் ஒன்றியக்குழு கூட்டம் தலைவர் அலமேலுஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. ஒன்றியக்குழு துணைத்தலைவர் விமலாமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நடராஜன், ரங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பார்வதி வரவேற்றார். கூட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் 23 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் எடுத்தவாய்நத்தம், வாணியந்தல், சிறுவங்கூர், தென்கீரனூர், பெருமங்கலம், கரடிசித்தூர், தாவடிப்பட்டு, மாதவச்சேரி, ஆலத்தூர், பரமநத்தம், நீலமங்கலம், பெருமங்கலம் உள்பட 46 ஊராட்சிகளில் சிமெண்டு சாலை, கழிவு நீர் கால்வாய், குடிநீர் குழாய் ஆகியவை அமைத்தல், நீர்த்தேக்கத் தொட்டி மற்றும் சிறு பாலம் கட்டுதல் உள்ளிட்ட வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக 15-வது மத்திய நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 54 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தல் என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.