பெரம்பலூர்
வேப்பந்தட்டை நூலகத்தை விரிவுபடுத்த திட்டம்-அதிகாரி தகவல்
|வேப்பந்தட்டை நூலகத்தை விரிவுபடுத்த திட்டம் உள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட நூலக அலுவலர் கூறுகையில், தமிழக அரசின் பொது நூலகத்துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட மைய நூலகம், வேப்பந்தட்டையில் முழு நேர நூலகம் மற்றும் 18 கிளை நூலகங்கள், 24 ஊர்ப்புற நூலகங்கள், 42 பகுதி நேர நூலகங்கள் இயங்கி வருகின்றன. நூலகங்களில் இடப் பற்றாக்குறை இருப்பது உண்மைதான். மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் வசதிக்காக பெரம்பலூர் எம்.எல்.ஏ. நிதியுதவியில் புதிதாக ஒரு ஷெட் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல, வேப்பந்தட்டை நூலகத்தை விரிவுபடுத்தி கட்டிடம் கட்ட ஆலோசித்து வருகிறோம். நூலகத் துறையிடம் போதிய நிதி இல்லை. எனவே, மக்கள் பிரதிநிதிகள், நன்கொடையாளர்கள் ஆகியோரிடமிருந்து பங்களிப்பைப் பெற்று, கூடுதல் கட்டிடங்கள் கட்டவும், தளவாடப் பொருட்கள் வாங்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.