< Back
மாநில செய்திகள்
தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கான பயணத்தின் போது முதலீடுகளை ஈர்க்க திட்டம் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
மாநில செய்திகள்

தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கான பயணத்தின் போது முதலீடுகளை ஈர்க்க திட்டம் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

தினத்தந்தி
|
19 Sept 2022 9:05 PM IST

தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கான பயணத்தின் போது தோல் மற்றும் தோல் அல்லாத பொருட்கள் உற்பத்தியில் முதலீடுகளை ஈர்க்க திட்டம் உள்ளது என கூறினார்.

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு மேற்கொள்ளப்பட உள்ள பயணத்தின் மூலம் தோல் மற்றும் தோல் அல்லாத பொருட்கள் உற்பத்தியில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. தோல் பொருட்கள் உற்பத்திக்கான கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் தோல் அல்லாத பொருட்கள் உற்பத்திக்கான தனி சிப்காட் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

தோல் மற்றும் தோல் பொருட்கள் அல்லாத உற்பத்தி முதலீடுகளில் வடமாவட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக வேலை வாய்ப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.

சிங்கப்பூர் நாட்டின் வர்த்தகத் துறை அமைச்சருடன் நடைபெற்ற சந்திப்பின் மூலம், தமிழகத்தில் ஆப்பிள் செல்போன் நிறுவனத்திற்கு தேவையான உதிரிபாகளை தயாரிக்க சிங்கப்பூர் நிறுவனம் முன் வந்துள்ளது. கீழடியில் கிடைக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்