மயிலாடுதுறை
மயிலாடுதுறை மாவட்டத்தில் மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்
|மயிலாடுதுறை மாவட்டத்தில் நாளை மின்நிறுத்தம் செய்யடும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறையாறு:
திருவெண்காடி,செம்பனார்கோவில்
திருவெண்காடு, துணைமின்நிலையத்தில் இருந்து செல்லும் மேலையூர் மின்பாதையில் பருவகால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மேலையூர் மின்பாதையிலிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான மேலையூர், ராதாநல்லூர், இளையமதுகூடம், மேலபெரும்பள்ளம் கீழபெரும்பள்ளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
இதேபோல் கிடாரங்கொண்டான், பொறையாறு துணை மின்நிலையத்திலிருந்து செல்லும் செம்பனார்கோவில், பொறையாறு மின்பாதையில் பருவகால பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செம்பனார்கோவில் மின்பாதையிலிருந்து மின்வினியோகம் பெரும்பகுதிகளான மேலையூர், மெயின்ரோடு கருவாழக்கரை, மெயின்ரோடு கஞ்சாநகரம் செம்பனார்கோவில், பரசலூர் மெயின்ரோடு மற்றும் பொறையாறு, எருக்கட்டாஞ்சேரி, காத்தான்சாவடி ஒழுகைமங்கலம் மற்றும் சந்திரபாடி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேலும் மின் நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது. இந்த தகவலை செம்பனார்கோவில ்உதவிசெயற்பொறியாளர் அப்துல்வஹாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.
மணல்மேடு
மணல்மேடு துணை மின் நிலையத்தில் இருந்து மின்னோட்டம் பெறும் மின்பாதையில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக மேற்கண்ட மின்பாதையில் இருந்து மின் வினியோகம் பெறும் மணல்மேடு நகரம், விருதாங்கநல்லூர், ராதாநல்லூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேலும் அன்றைய தினம் மின்நிறுத்தம் செய்வது மின்கட்டமைப்பு மற்றும் இதர காரணங்களை பொறுத்து கடைசி நேர மாறுதலுக்குட்பட்டது. இந்த தகவலை மணல்மேடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் இளையராஜா தெரிவித்தார்.