< Back
மாநில செய்திகள்
சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்
மாநில செய்திகள்

சென்னையில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

தினத்தந்தி
|
21 Aug 2024 6:44 AM IST

சென்னையின் ஒருசில பகுதிகளில் இன்று மின் தடை செய்யப்படுகிறது.

சென்னை,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை அடையாறு, அஸ்தினாபுரம், மடிப்பாக்கம், அம்பத்தூர், அத்திப்பட்டு, சோத்துபெரும்பேடு மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

அஸ்தினாபுரம்: ஆர்.பி.சாலையின் ஒரு பகுதி, அண்ணாசாலை, காயத்ரி நகர், வேல்முருகன் நகர், வினோபாஜி நகர், கிருஷ்ணா நகர், புவனேஷ்வரி நகர், பாஷ்யம் நகர், மாணிக்கம் நகர், பி.பி.ஆர். தெரு.

மடிப்பாக்கம்: ஷீலா நகர், அன்னை தெரசா நகர், கோவிந்தசாமி நகர், ராஜாஜிநகர், ராம் நகர் (எஸ்), குபேரன் நகர், மகாலட்சுமி நகர், ராம் நகர் (என்), ராஜராஜேஸ்வரி நகர், பஜனை கோவில் தெரு, பெரியார் நகர், குளக்கரை தெரு, அண்ணா நகர், ராஜலட்சுமி நகர்.

அம்பத்தூர்: சிட்கோ தொழிற்பேட்டை, ஈ.பி.சாலை 1-வது தெரு, அப்பாசாமி சாலை, வடக்கு கட்டத்தின் 9-வது மற்றும் 10-வது தெரு, 7-வது மற்றும் 8-வது தெரு டாஸ் எஸ்டேட், மகாத்மா காந்தி சாலை, வடக்கு கட்டத்தின் 6 முதல் 9-வது தெரு.

அத்திப்பட்டு: ஜீவாரி சிமெண்ட்ஸ், அத்தானி கன்டெய்னர் டெர்மினல் லிமிடெட், வடசென்னை நிலை 4 பி.எச்.இ.எல்.தளம், இந்தியன் ஆயில் எல்.என்.ஜி.லிமிடெட், வடசென்னை நிலை 1 துணை மின்நிலையம்.

சோத்துபெரும்பேடு: நெற்குன்றம், சோத்துபெரும்பேடு ஒரு பகுதி, செக்கஞ்சேரி, அட்டப்பாளையம், கன்னியம் பாளையம், பசுவன்பாளையம், ஞாயிறு கிராமம், மபுஷ்கான்பேட்டை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்