பெரம்பலூர்
மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள்
|மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த மருத்துவ முகாம் நடைபெறும் இடங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ முகாம்கள்
பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களை களைய சம்பந்தப்பட்ட துறைகள் மற்றும் இதர நிறுவனங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மருத்துவ முகாம்கள் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் உள்ள கிராமங்கள் வாரியாக நடத்தப்படவுள்ளது.
அதன்படி மத்திய அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகாம் நடத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் எசனை அரசு உயர்நிலைப்பள்ளியில் 15-ந் தேதி அன்றும், அன்னமங்கலம் ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் 16-ந் தேதி அன்றும், மலையாளப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 17-ந் தேதி அன்றும், பிரம்மதேசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 18-ந் தேதி அன்றும், வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 22-ந் தேதி அன்றும், பாண்டகப்பாடி மானிய ெதாடக்கப்பள்ளியில் 23-ந் தேதி அன்றும், அல்லிநகரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 24-ந் தேதியன்றும், கீழமாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 25-ந் தேதி அன்றும், இரூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 29-ந் தேதியன்றும், காரை அரசு மேல்நிலைப்பள்ளியில் 30-ந் தேதியன்றும், ஜமீன் பேறையூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் அடுத்த மாதம்(டிசம்பர்) 13-ந் தேதி அன்றும், மாவிலங்கை இந்து மானிய ெதாடக்கப்பள்ளியில் 14-ந் தேதி அன்றும், நக்கசேலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 15-ந் தேதி அன்றும், அகரம்சீகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 16-ந் தேதி அன்றும், கீழப்புலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 20-ந் தேதி அன்றும், கிழுமத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 21-ந் தேதி அன்றும், ஓலைப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 22-ந் தேதி அன்றும், பரவாய் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 23-ந் தேதி அன்றும், சிறுமத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 27-ந் தேதி அன்றும், வடக்குமாதவி அரசு உயர்நிலைப்பள்ளியில் 28-ந் தேதி அன்றும், எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 29-ந் தேதியன்றும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது.
சிகிச்சை
மேற்குறிப்பிட்ட அட்டவணையின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நான்கு ஒன்றியங்களிலும் பார்வைத்திறன் குறையுடையோர், செவித்திறன் குறையுடையோர், மனவளர்ச்சிக்குன்றியோர், உடல் இயக்க குறைபாடுடையோர் மற்றும் பல்வகை குறைபாடுடையோர் தேசிய அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், பதிவு செய்தல், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, உதவி உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கண்டறியும் ஒருங்கிணைந்த மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறவுள்ளது.
இம்முகாமிற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை (மருத்துவ சான்றிதழுடன்) பிறப்பு சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 6 எடுத்து வருமாறு மாவட்ட கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.