< Back
மாநில செய்திகள்
அனுமதியின்றி வைத்த கருணாநிதி சிலை அகற்றம்
மதுரை
மாநில செய்திகள்

அனுமதியின்றி வைத்த கருணாநிதி சிலை அகற்றம்

தினத்தந்தி
|
3 Jun 2022 1:47 AM IST

மதுரையில் அனுமதியின்றி வைத்த கருணாநிதி சிலை அகற்றப்பட்டது.

மதுரை,

மதுரை செல்லூர் மீனாட்சிபுரம் சத்திய மூர்த்தி தெருவில் திடீரென்று முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் மார்பளவு சிலை வைக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே செல்லூர் போலீசார் அங்கு விரைந்து சென்று சிலையை வைத்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர். அதில் அந்த பகுதியை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஒருவர் முயற்சியால் சிலை வைக்கப்பட்டதாகவும், அதற்கு அவர் யாரிடமும் அனுமதி வாங்கவில்லை என்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார், அந்த சிலையை அகற்றினர். மேலும் அந்த சிலையை மீண்டும் அதே தி.மு.க. நிர்வாகியிடம் போலீசார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Related Tags :
மேலும் செய்திகள்