< Back
மாநில செய்திகள்
பழைய ஜெயங்கொண்டம் மாணவிக்கு கரூர் மருத்துவக்கல்லூரியில் இடம்
கரூர்
மாநில செய்திகள்

பழைய ஜெயங்கொண்டம் மாணவிக்கு கரூர் மருத்துவக்கல்லூரியில் இடம்

தினத்தந்தி
|
20 Oct 2022 11:56 PM IST

பழைய ஜெயங்கொண்டம் மாணவிக்கு கரூர் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசு பள்ளிகளில் படித்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். மற்றும் பல் மருத்துவ படிப்பில் சேர உள்ளனர். இதற்கான கலந்தாய்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில், கரூர் மாவட்டம், பழையஜெயங்கொண்டம் தெற்கு குடி தெருவை சேர்ந்தநாகராஜ்-அமுதா தம்பதியின் மகள் யுவஸ்ரீ (வயது 18) என்ற மாணவிக்கு பொதுப்பிரிவில் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்துள்ளது. இவர் பழைய ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துள்ளார். நீட் தேர்வில் 320 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த யுவஸ்ரீயின் பெற்றோர், உறவினர்கள், கிராமமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

மேலும் செய்திகள்