ஈரோடு
பெருந்துறை அருகே குடிசை தீப்பிடித்து எரிந்தது; மூதாட்டி உடல் கருகி பலி
|பெருந்துறை அருகே குடிசை தீப்பிடித்து எரிந்ததில் மூதாட்டி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
பெருந்துறை
பெருந்துறை அருகே குடிசை தீப்பிடித்து எரிந்ததில் மூதாட்டி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
குடிசை பற்றி எரிந்தது
பெருந்துறை காஞ்சிக்கோவில் அருகே உள்ள கவுண்டம்பாளையம் சக்தி நகரை சேர்ந்தவர் முத்தான். அவருடைய மனைவி தங்காள் (வயது 60). கூலி தொழிலாளி. முத்தான் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்தநிலையில் கடந்த 6-ந் தேதி இரவு தங்காள் குடிசைக்குள் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது மின்விளக்குக்கு சென்ற ஒயரில் மின்கசிவு ஏற்பட்டு குடிசையில் தீப்பிடித்தது. சில நொடிகளில் குடிசை முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் தூங்கிக்கொண்டு இருந்த தங்காள் மீது நெருப்பு பட்டு உடல் கருகியது. இதனால் அவர் அலறி துடித்தார்.
விசாரணை
சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் உள்ளே ஓடிச்சென்று தங்காளை மீட்டு வெளியே அழைத்து வந்தனர். எனினும் அவர் உடலின் பெரும்பகுதி கருகியது. உடனே சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தண்ணீரை ஊற்றி அக்கம் பக்கத்தினரே குடிசையில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்தநிலையில் சிகிச்சை பெற்று வந்த தங்காள் நேற்று முன்தினம் உயிரிழந்தார்.
இதுகுறித்து காஞ்சிக்கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதா பேகம், சப்-இன்ஸ்பெக்டர் துரைசாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.