ஈரோடு
அந்தியூர் அருகே பரிதாபம்சத்துணவு அமைப்பாளர் உடல் கருகி சாவு
|அந்தியூர் அருகே சமையல் செய்தபோது ஆடையில் தீப்பிடித்து சத்துணவு அமைப்பாளர் உடல் கருகி பலியானார்.
அந்தியூர்
அந்தியூர் அருகே சமையல் செய்தபோது ஆடையில் தீப்பிடித்து சத்துணவு அமைப்பாளர் உடல் கருகி பலியானார்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சத்துணவு அமைப்பாளர்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் ரெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி சண்முகப்பிரியா (வயது 46).
அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் சத்துணவு அமைப்பாளராக சண்முகப்பிரியா பணியாற்றி வந்தார்.
தீப்பிடித்தது
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர் வீட்டின் வெளியே விறகு அடுப்பில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென அவர் அணிந்திருந்த ஆடையில் தீப்பற்றியது.
இதில் உடல் முழுவதும் தீ பற்றி பிடித்தது. உடலில் தீப்பற்றியதும், வலியால் அவர் அலறி துடித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சண்முகப்பிரியாமீது பற்றி எரிந்த தீயை அணைத்தனர்.
சாவு
இதில் உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.