< Back
மாநில செய்திகள்
குடிநீர் குழாயில் உடைப்பு
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

குடிநீர் குழாயில் உடைப்பு

தினத்தந்தி
|
22 Jan 2023 7:15 PM GMT

வாய்மேடு மருதூர் கடைத்தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வாய்மேடு மருதூர் கடைத்தெருவில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை விரைந்து சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

வீணாகும் தண்ணீர்

நாகை மாவட்டம் வண்டுவாஞ்சேரி நீரேற்று நிலையத்தில் இருந்து வேதாரண்யத்துக்கு அண்ணாப்பேட்டை, வாய்மேடு, தகட்டூர், மருதூர், ஆயக்காரன்புலம், கருப்பம்புலம் வழியாக கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாய் செல்கிறது. இந்த நிலையில் மருதூர் கடைத்தெருவில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள வாய்க்காலில் தண்ணீர் வீணாக செல்கிறது.

இதேபோல பல இடங்களிலும் வேதாரண்யம் செல்லும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. ஏற்கனவே 2 நாட்களுக்கு ஒருமுறை கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தில் பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

பற்றாக்குறை

பல இடங்களில் 3 நாட்களுக்கு ஒரு முறை தான் பொதுமக்களுக்கு குடிநீர் வந்து கொண்டிருக்கிறது. கோடை காலம் தொடங்கும் முன்பே கொள்ளிடம் கூட்டு குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதால் மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து புகார் தெரிவித்தும் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். எனவே குடிநீர் வீணாவதை தடுக்க மருதூர் கடைத்தெரு வழியாக செல்லும் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை விரைந்து சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்