< Back
மாநில செய்திகள்
விவசாய நிலங்களில் பயிர்களை நாசமாக்கும் பன்றிகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

விவசாய நிலங்களில் பயிர்களை நாசமாக்கும் பன்றிகள்

தினத்தந்தி
|
24 Nov 2022 12:15 AM IST

விவசாய நிலங்களில் பயிர்களை நாசமாக்கும் பன்றிகள்

குற்றம்பொருத்தானிருப்பு பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிர்களை நாசமாக்கும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் கிராம மக்கள் வலியுறுத்தினர்.

ஆய்வு

நாகை ஒன்றியம் பொரவச்சேரி ஊராட்சியில் குற்றம்பொருத்தானிருப்பு அய்யனார் கோவில் தெருவில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடத்தை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அருண்ராய், கலெக்டர் அருண் தம்புராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது கலெக்டரிடம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் கூறுகையில்,

எங்கள் பகுதியில் 100 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்களில் சம்பா நெற்பயிர்கள் சாகுபடி செய்திருந்தோம். கடந்த 3 மாதங்களாகவே தினமும் பன்றிகள் தொல்லை அதிகமாகி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகிறது. மேலும் ஐவநல்லூர், பொரவச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பன்றிகள் இங்கு வந்து தினமும் பயிர்களை நாசமாக்கி வருகின்றன.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் எங்கள் பகுதியில் 400 குடும்பங்கள் வசித்து வருகிறோம். 5 சாலைகள் இருந்தும் போக்குவரத்துக்கு பயன்பாடு இல்லாமல் தினமும் சென்று வருகின்றோம். எனவே விளைநிலங்களில் பயிர்களை நாசமாக்கும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து நடவடிக்ைக எடுப்பதாக கலெக்டர் பொதுமக்களிடம் கூறினார்.

மேலும் செய்திகள்