< Back
மாநில செய்திகள்
மக்காச்சோளத்தை சேதப்படுத்தும் பன்றிகள்
விருதுநகர்
மாநில செய்திகள்

மக்காச்சோளத்தை சேதப்படுத்தும் பன்றிகள்

தினத்தந்தி
|
3 Dec 2022 7:15 PM GMT

வெம்பக்கோட்டை அருகே மக்காச்சோளத்தை பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே மக்காச்சோளத்தை பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

மக்காச்சோளம் சாகுபடி

வெம்பக்கோட்டை ஒன்றியம் சுப்ரமணியபுரம், பனையடிப்பட்டி, மடத்துப்பட்டி, சல்வார்பட்டி, இறவார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர்.

அவர்கள் சாகுபடி செய்து தற்போது 40 நாட்கள் ஆகிறது. பயிர்கள் நன்கு வளர்ந்து கதிர்கள் வெளிவரும் நிலையில் உள்ளது. பயிர்கள் நன்றாக வளர்ந்து இருப்பதால் விவசாயிகள்மகிழ்ச்சியுடன் இருந்தனர்.

பன்றிகளால் சேதம்

இந்தநிலையில் வைப்பாற்று பகுதியில் ஏராளமான காட்டு பன்றிகள், மான்கள் இருப்பதால் அங்கு உணவு கிடைக்காததால் தங்களின் உணவு தேவைக்கு வயலுக்குள் புகுந்து மக்காச்சோளத்தை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பன்றிகளை விரட்ட இரவு நேரங்களில் விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் தீப்பந்தம் மற்றும் பட்டாசுகள் வெடித்து விரட்டுகின்றனர். இருப்பினும் மக்காச்சோள பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வருகிறது.

இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். எனவே விளைநிலங்களுக்குள் புகுந்து பன்றிகள் சேதப்படுத்துவதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்