தஞ்சாவூர்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
|கும்பகோணத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
கும்பகோணம்;
கும்பகோணம் கோட்டாட்சியர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.கோட்டாட்சியர் பூர்ணிமா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீதம் இடம் ஒதுக்க வேண்டும், அரசு நிறுவனமான ஆவின் பூத்துக்கு, முன்னுரிமை அளித்து விண்ணப்பம் செய்தவர்களுக்கு, உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்ட தனித்துவ மாற்றுத் திறனாளி அடையாள அட்டையைப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வரை அரசு வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், கலெக்டர் அலுவலகத்தில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகனங்களை, தகுதியுள்ளவர்களுக்கு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தனர். கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, இலவச வீட்டு மனை கேட்டு 150- க்கும் மேற்பட்டோர் மனுக்களை வழங்கினர்.