< Back
மாநில செய்திகள்
தஞ்சாவூர்
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்
|23 Feb 2023 2:18 AM IST
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடக்கிறது
தஞ்சாவூர்;
தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. எனவே தஞ்சை கோட்டத்திற்குட்பட்ட தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு மற்றும் பூதலூர் வட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.