< Back
சினிமா செய்திகள்
வைரலாகும் புகைப்படங்கள்... ஹன்சிகா திருமண சடங்குகள் தொடங்கின
சினிமா செய்திகள்

வைரலாகும் புகைப்படங்கள்... ஹன்சிகா திருமண சடங்குகள் தொடங்கின

தினத்தந்தி
|
24 Nov 2022 8:17 AM IST

ஹன்சிகா மட்டா கி சவுகி என்ற சடங்கில் வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், நடனம் ஆடும் வீடியோ ஆகியவை வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன.

தமிழில் அதிக படங்களில் கதாநாயகியாக நடித்துள்ள ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். பிரான்சில் ஈபிள் டவர் முன்னால் நின்று சோகைல் கதுரியா தன்னிடம் காதலை வெளிப்படுத்தும் புகைப்படத்தையும் ஹன்சிகா பகிர்ந்து இருந்தார்.

இவர்கள் திருமணம், 450 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற ஜெய்ப்பூர் அரண்மனையில் அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி நடக்க உள்ளது. திருமணத்துக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், தற்போது பாரம்பரிய முறைப்படி திருமண சடங்குகள் தொடங்கி உள்ளன. ஹன்சிகா திருமண சடங்குக்கு காரில் புறப்பட்டு செல்லும் வீடியோ, மட்டா கி சவுகி என்ற சடங்கில் வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், அவருடன் ஹன்சிகா ஜோடியாக நடனம் ஆடும் வீடியோ ஆகியவை வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகின்றன. சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கு ருசியான உணவும் பரிமாறப்பட்டன.

மேலும் செய்திகள்