< Back
மாநில செய்திகள்
பூலாம்பட்டி, கல்வடங்கம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு
சேலம்
மாநில செய்திகள்

பூலாம்பட்டி, கல்வடங்கம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைப்பு

தினத்தந்தி
|
21 Sep 2023 8:56 PM GMT

பூலாம்பட்டி, கல்வடங்கம் காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

எடப்பாடி:

பூலாம்பட்டி

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி சேலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடந்து வந்தது. அப்படி பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் மேட்டூர், பூலாம்பட்டி, கல்வடங்கம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. கடந்த 4 நாட்களாக விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் நேற்றும் பூலாம்பட்டி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. மேளதாளம் முழகங் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு ஆற்றின் கரையில் பூஜை செய்யப்பட்டது. பின்னர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டன. இங்கு 500-க்கும் மேற்பட்ட சிலைகள் கரைக்கப்பட்டன.

கல்வடங்கம்

தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் 4-வது நாளாக 25 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. தேவூர், எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் வாகனங்களில் கொண்டு வரப்பட்டு கல்வடங்கம் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்