2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணி: அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி தொடங்கியது
|இந்த 2-ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட வழித்தடங்கள் அமைக்கும் பணிகளுக்காக ராயப்பேட்டை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள அஜந்தா மேம்பாலத்தை இடிக்கும் பணி நேற்று நள்ளிரவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. எந்த ஒரு அசம்பாவிதமும் ஏற்படாமல் இருப்பதற்காக அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
2 பொக்லைன் இயந்திரங்களின் உதவியுடன் மேம்பாலத்தை இடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேம்பாலம் இடிப்பு பணி காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மயிலாப்பூர், மந்தைவெளி, அடையாறுக்கு செல்லும் வாகனங்கள் வி.பி.ராமன் சாலையில் இயக்கப்படுகின்றன.
மாதவரம் பால் பண்ணையிலிருந்து சிறுசேறு சிப்காட் வரை 45.8 கிலோ மீட்டர் தொலைவில் அமையவிருக்கும் மெட்ரோ 2-ம் கட்ட பணியின் ஒரு பகுதியாகும். இந்த மெட்ரோ ரெயில் பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் முடிக்கப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.