< Back
மாநில செய்திகள்
காப்பு காடுகளில் 2-ம் கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

காப்பு காடுகளில் 2-ம் கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு

தினத்தந்தி
|
6 March 2023 12:12 AM IST

காப்பு காடுகளில் 2-ம் கட்டமாக பறவைகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் உத்தரவின் பேரில், பெரம்பலூர் வனச்சரகர் பழனிகுமரன் தலைமையில், பறவைகள் ஆராய்ச்சியாளர் சிவக்குமார் முன்னிலையில், வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்காவலர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரநிலங்களில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணிகளில் 2-ம் கட்டமாக நேற்று ஈடுபட்டனர். இதில் பெரம்பலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட சிறுவாச்சூர், வேலூர், செஞ்சேரி, ரெங்கநாதபுரம், எளம்பலூர், மயிலூற்று அருவி ஆகிய பகுதிகளில் காப்பு காடுகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்து முடிந்தது.

மேலும் செய்திகள்