< Back
மாநில செய்திகள்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்
விபத்தில் மருந்தக உரிமையாளர் பலி
|6 July 2022 12:26 AM IST
ரிஷிவந்தியம் அருகே நடந்த விபத்தில் மருந்தக உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ரிஷிவந்தியம்,
ரிஷிவந்தியம் ஒன்றியம் கீழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 45). இவர் அதே பகுதியில் மருந்தகம் நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இளையனார்குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டார். இளையனார்குப்பத்தில் இருந்து அத்தியூர் செல்லும் சாலையில் சென்றபோது புஷ்பகிரி அருகே எதிர்பாராதவிதமாக சாலையோர பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் பாய்ந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டுரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.